முகப்புடோலிவுட்

‘பாகுபலி’ பிரபாஸ் ஃபேன்ஸ், இந்த அப்டேட் உங்களுக்கு தான்..! #Prabhas21

  | February 27, 2020 09:39 IST
Nag Ashwin

துனுக்குகள்

  • பாகுபலி திரைப்படம் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் பிரபாஸ்.
  • அவர் கடைசியாக சாஹோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
  • தற்போது கே.வி.ராதா கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடித்த்வருகிறார்.

பிரபாஸ் தனது 21-வது படத்தில் ‘மகாநதி' இயக்குநர் நாக் அஸ்வினுடன் இணைகிறார். 

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார், இதனை 50 ஆண்டுகாலமாகத் திரைப்படங்களை வெற்றிகரமாகத் தயாரித்துக் கொண்டாடிவரும் வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. திரையுலகில் தங்களின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ஒரு சிறிய வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்த ‘வைஜயந்தி மூவிஸ்' புரொடக்ஷன் ஹவுஸ் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இப்படத்தில் இணையும் மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இயக்குநர் அஸ்வின் தேசிய விருது பெற்ற மகாநதி திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் சுயசரித திரைப்படமான மகாநதி திரைப்படம் தமிழில் ‘நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. சாவித்திரியின் கதாபாத்திரத்தில் ‘கீர்த்தி சுரேஷ்' நடித்திருந்தார்

.

பிரபாஸ், தற்போது தனது 20-வது படத்தில் தற்காலிகமாக பிரபாஸ் 20 என்ற பெயரில் பணியாற்றி வருகிறார். கே.வி.ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்தை யு.வி கிரியேஷன்ஸுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரிக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்