முகப்புடோலிவுட்

சஹோ கொண்டாட்டத்தில் விபரீதம்! பிரபாஸ் ரசிகர் மின்சாரம் தாக்கி மரணம்!

  | August 30, 2019 14:06 IST
Prabhas

துனுக்குகள்

 • சஹோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது
 • பிரபாஸ் மற்றும் ஷர்தா கபூர் இந்த படத்தில் நடித்துள்ளனர்
 • சுஜித் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
வம்சி கிருஷ்ண ரெட்டி தயாரிப்பில் சுஜீத் இயக்கத்தில் சுமார் 300 கோடி செலவில் உருவாகி இருக்கும் படம் ‘சஹோ'. பிரபாஸ், ஷர்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று உலகும் முழுவதும் வெளியாகி இருக்கிறது.
 
படம் இன்று வெளியானதை முன்னிட்டு பிரபாஸின் ரசிகர்கள் நேற்று மாலை முதலே இப்படத்தை கொண்டாடுவதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பேனர் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது உள்ளிட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ரசிகர்கள் கொண்டாட இரவு 1 மணிக்கே காட்சி போடலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது மின்சார ஒயர் உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் தியேட்டர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தி உள்ளார்கள். பிரேத பரிசோதனைக்கு அந்த நபரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com