முகப்புடோலிவுட்

'அவர்களுக்காக நான் பிராத்திக்கிறேன்..' - விசாகப்பட்டினம் விபத்திற்காக வருத்தப்படும் ராஜமௌலி

  | May 07, 2020 16:43 IST
Vaizak

துனுக்குகள்

 • ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன
 • இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில்
 • பிரபல இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்ஏற்கனவே கொரோனா அச்சத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் இந்த ஆலை நச்சு வாயு தாக்கம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இறந்தவர்கள் குடும்பத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துள்ளனர். பிரபல இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "அந்த பகுதியில் நடத்த நிகழ்வு குறித்த வெளியான காணொளியை கண்டு மனம் கலங்கி போனதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்காக பிராத்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்"
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com