முகப்புடோலிவுட்

ராதா ரவிக்கு வலுக்கும் கண்டனம்; நயன்தாராவிற்கு ஆதரவாக தெலுங்கு திரைப்பிரபலங்கள்

  | March 26, 2019 18:10 IST
Telugu Celebrities

துனுக்குகள்

 • பாகுபலி படத்தில் நடித்தவர் ராணா
 • சமந்தா விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார்
 • இப்படம் மார்ச் 29ல் வெளியாகிறது
 
சமீபத்தில் நடந்த ‘கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவி நயன்தாரா குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் எதிரொளியாக அவர் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவருடைய கருத்துக்கு தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ராதா ரவியின் கருத்துக்கு தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

 
ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் ஏதேதோ செய்கிறீர்கள். நாங்கள் அனைவரும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள். உங்கள் இதயம் அமைதிக்கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர்ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு அமைதிகொள்ளுங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். இவரைத்தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா,
 
“ஆகச்சிறந்த நடிகையை பற்றி நடிகர் ராதாரவி அருவருப்பான கருத்துகளை கூறியதைக் கேட்டேன். உங்கள் கருத்துகள் உங்கள் அருவருப்பான குணத்தை காட்டுகிறது. பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்த அவரது திறனைக் காட்டுகிறது' என பதிவிட்டிருக்கிறார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com