முகப்புடோலிவுட்

RGV-ன் அடுத்த பட டைட்டில் ‘அல்லு’.! சர்ச்சையான ட்வீட்களுடன் அறிவிப்பு..

  | August 03, 2020 00:01 IST
Ram Gopal Varma

"இது ஒரு பெரிய நட்சத்திரத்தின் குடும்பத்திற்கு பின்னால் இருந்து ஒரு சகோதரர் என்ன செய்தார் என்பது குறித்த கற்பனையான கதை.."

ராம் கோபால் வர்மா சமீபத்தில் ‘பவர் ஸ்டார்' என்ற பெயரில் ஒரு படத்தை அறிவித்து, அதன் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றஒ வெளியிட்டார், மேலும் இது டோலிவுட் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாணை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் கூறினார். இப்போது மீண்டும் தனது அடுத்த திட்டத்தைப் பற்றி அவர் அறிவிக்க, அது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

அவர் தனது அடுத்த திட்டத்திற்கு ‘அல்லு' என்று தலைப்பிட்டுள்ளார். மேலும் இது ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் “RgvWorldTheatre இன் அடுத்த கற்பனை ரியாலிட்டி FR படங்களில் ஒன்று ‘அல்லு' இது ஒரு பெரிய நட்சத்திரத்தின் குடும்பத்திற்கு பின்னால் இருந்து ஒரு சகோதரர் என்ன செய்தார் என்பது குறித்த கற்பனையான கதை.. ஒரு நட்சத்திரம் தனது ‘ஜன ராஜ்யம் கட்சி'யை அறிவித்ததை அடுத்து நடப்பது போன்று கதை தொடங்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ச்சியான ட்வீட்டுகளில், சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், அல்லு சிரீஷ், ராம் சரண் உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆர்.ஜி.வி இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, அவர் பழிவாங்க எந்த திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு நடிகர்களை குறிவைத்துள்ளார் என ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறார். இருப்பினும், நிறைய ரசிகர்கள் படம் குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

தனது அடுத்த ட்வீட்டில், அல்லு படத்தில், தியேட்டர் மாஃபியா இருக்காது மற்றும் அன்பான சகோதரர்களிடையேயான பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்று நான் கூறமாட்டேன் என பல வில்லங்கமான பதிவுகளை எழுதினார். இப்படத்தின் அறிவிப்பு வழக்கம் போல சர்ச்சையை கிளப்பியுள்ளது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com