முகப்புடோலிவுட்

வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் ‘த்ரில்லர்’ பட ட்ரெய்லர்..!

  | July 30, 2020 21:38 IST
Ram Gopal Varma

இப்படம் விரைவில் ராம் கோபால் வர்மாவின் சொந்த ஸ்ட்ரீமிங் தளமான RGV World Theatre-ல் வெளியாகவுள்ளது.

உலகம் கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லா நாடுகளிலும் பொழுதுபோக்குத் தொழில்கள் இயங்கமுடியாமல் முடங்கிக் கிடக்கிறது. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், மல்டிபிளக்ஸ்கள் இயங்கும், மக்கள் எப்போது இயல்பு நிலையிக்கு வருவார்கள் என்று தெரியாமல் இருக்கின்றனர். ஆனாலும், இவை எதுவும் சர்ச்சையின் செல்ல மகன் என்று அழைக்கப்படும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை தொடர்ந்து படங்களை இயக்கி வெளியிடுவதிலிருந்து தடுக்க முடியவில்லை.

கடந்த 3 மாதங்களில், க்ளைமேக்ஸ், கொரோனா வைரஸ், நேகட் நங்கா நாக்னம், 12 ‘O' Clock, கிட்னாப்பிங் ஆஃப் கத்ரீனா கைஃப், தி மேன் ஹூ கில்டு காந்தி, மர்டர் என ஏகப்பட்ட படங்களை அறிவித்து, படபிடிப்புக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் இந்த ஸ்மார்ட் இயக்குநர்.

இயக்குநர் ராம் கோபல் வர்மா தனது அடுத்த திட்டமான ‘த்ரில்லர்' எனும் புதிய படத்தை குறித்து அண்மையில் அறிவித்தார். மேலும் அந்த படத்தின் நாயகியின் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அதன் பரபரப்பு அடங்குவதற்குள், படத்தின் First Look போஸ்ட்டரையும் வெளியிட்டார். இப்படத்தில் முக்கிய கதப்பாத்திரங்களில் ஒரிசாவை சேர்ந்த அப்சரா ராணி மற்றும் ராக் காச்சி நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘த்ரில்லர்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். 18+ திரைப்படம் என்றபோதிலும், சில மணிநேரங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது இந்த புதுவிதமான கேமரா கோணங்கள் கொண்ட படத்தின் ட்ரெய்லர்.

இப்படம் விரைவில் ராம் கோபால் வர்மாவின் சொந்த ஸ்ட்ரீமிங் தளமான RGV World Theatre-ல் வெளியாகவுள்ளது. பார்வையளர்கள் ஆன்லைன் மூலன் கட்டணத்தை செலுத்தி படத்தை பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு ஏற்கெனவே க்ளைமேக்ஸ் மற்றும் நேகட் நங்கா நாக்னம் என இரண்டு படங்கள் வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com