முகப்புடோலிவுட்

அகில் அக்கினேனியுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா..?

  | September 12, 2020 22:49 IST
Rashmika

ராஷ்மிகா மந்தனா கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சாரிலேரு நீக்கேவரு' படத்தில் காணப்பட்டர்.

நாகர்ஜுனா அக்கினேனியில் இளைய மகனான அகில் அக்கினேனி, இயக்குனர் சுரேந்தர் ரெட்டியுடன் புதிய திரைப்படத்தை சமீபத்தில் அறிவித்திருந்தார். 

‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடித்த ‘சை ரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு புகழ்பெற்ற சுரேந்தர் ரெட்டி, வக்காந்தம் வம்சியின் சக்திவாய்ந்த கதையில் அகிலை இயக்கப் போகிறார். அகில் அக்கினேனி மற்றும் சுரேந்தர் ரெட்டி ஆகியோரின் இந்த புதிய கலக்கலான கூட்டணி திட்டத்தை, ராமபிரம்மம் சுங்கரா ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர் மற்றும் சுரேந்தர் ரெட்டியின் சரண்டர் 2 சினிமா பேனரின் கீழ் தயாரிக்கிறார்.

சுரேந்தர் ரெட்டி தனது ஹீரோக்களை அவர்களின் ஸ்டைலான சிறந்த முறையில் வழங்குவதில் பிரபலமானவர் என்பதால், அவர் தனது 5-வது படத்தில் அகில் அக்கினேனியின் புதிய தோற்றத்தில் காட்டத் தயாராகி வருகிறார்.

இப்போது இப்படத்தில் ‘கீதா கோவிந்தம்' புகழ் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா அகில் அக்கினேனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ‘பொகரு' எனும் கன்னட திரைப்படம் மற்றும் அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா' எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துவரும் ரஷ்மிகா மந்தனா, விரைவில் ‘ரெமோ' புகழ் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் .

ராஷ்மிகா மந்தனா கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சாரிலேரு நீக்கேவரு' படத்தில் காணப்பட்டர். இப்படத்தையும், ஏ.கே. என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘அகில் 5' உடன் அதன் வெற்றியை மிகப் பெரிய அளவில் தொடரப் போகிறது. பிற நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com