முகப்புடோலிவுட்

சரியான பதில் அளித்தால் என்னோடு காபி அருந்தலாம்! நடிகை ரெஜினாவின் ட்வீட்டால் பரப்பரப்பான ரசிகர்கள்!

  | August 19, 2019 15:40 IST
Evaru

துனுக்குகள்

 • எவரு படத்தில் ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
 • தமிழில் அறிமுகமான ரெஜினா தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்
 • தமிழில் கள்ள பார்ட் படத்தில் நடித்து வருகிறார் ரெஜினா
சரியான பதில் அளித்தால் என்னுடன் அமர்ந்து காபி அருந்தலாம் என்று ரெஜினா ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைத்துள்ளார்.
 
தமிழில் ‘கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினி கசாண்ட்ரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திர மௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில், நெஞ்சம் மறப்பதில்லை, கள்ளபார்ட், கசட தபற, ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.
 
தமிழ் படங்கள் தவிர தெலுங்கு படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ரெஜினா. இவர் நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான “எவரு' திரில்லர் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் வெங்கட் ராம்ஜி இயக்கி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதத்தில் நடிகை ரெஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டி வைத்தள்ளார். அதில் “எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?” என்று கேள்வி கேட்டுள்ளார் இதற்கு சரியான பதில் அளிக்கும் ரசிகர் தன்னுடன் அமர்ந்து காபி அருந்தலாம் என்று கூறியிருக்கிறார்.
 
ரசிகர்கள் தொடர்ந்து அவருடையய கேள்விக்கு பதிலளித்து வருகிறார்கள். மேலும் தற்போது ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கூட அப்படத்தின் நடிகர்கள் கலந்துக்கொள்வது இயலாத காரியமாக இருந்து வரும் சூழலில் தான் நடித்த படத்திற்காக இப்படியொரு விளம்பரம் செய்திருக்கும் ரெஜினாவை தெலுங்கு திரைத்துறையினர் பாராட்டி வருகிறார்கள்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com