முகப்புடோலிவுட்

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் மேலும் இரண்டு இந்தி நடிகர்கள்..?

  | March 21, 2019 16:00 IST
Rrr Movie Cast

துனுக்குகள்

 • இப்படத்தை ராஜ மௌலி இயக்குகிறார்
 • ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரன், கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்
 • அஜய் தேவகன், அலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்
பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி ‘ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரன், கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

மேலும் இந்தி நடிகர் அஜய் தேவகன், அலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் மேலும் இந்தி நடிகர்களை இணைக்க ராஜமௌலி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் சஞ்சை தத், வருண் தவான், இருவரும் இந்த படத்தில் நடிக்க பேசிவருவதாக தெரிகிறது.
தெலுங்கு மற்றும் இந்தி நடிகர்கள் அதிகம் இப்படத்தில் இணைந்திருப்பதால் இந்த படம் இந்திய அளவில் பேசப்படும் இந்தியப்படமாக இருக்க வேண்டும் என்று படக்குழுவினர் விரும்புவதாக கூறப்படுகிறது.       

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிப்படமான 'பாகுபலி' தென்இந்தியாவை விட  இந்தியில் அதிக வசூல் படைத்தது குறிப்பிடதக்கது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com