முகப்புடோலிவுட்

'யாருக்கும் கிடைக்காத ஒரு பெருமை' - மகிழ்ச்சியில் சாய் பல்லவி

  | February 10, 2020 12:09 IST
Sai Pallavi

நடிகர்கள் பலருக்கும் கிடைக்காத ஒரு பெருமை சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது

துனுக்குகள்

  • நடிகர்கள் பலருக்கும் கிடைக்காத ஒரு பெருமை சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது
  • 'யாருக்கும் கிடைக்காத ஒரு பெருமை' - மகிழ்ச்சியில் சாய் பல்லவி
  • தமிழில் தியா, மாரி - 2 மற்றும் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
சாய் பல்லவி, 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்கள் நெஞ்சிலும் இடம் பிடித்தார். திரைத்துறைக்கு வந்த வெறும் 4 ஆண்டுகளில் அவர் பல லட்ச ரசிகர்களை கவர்ந்தவர் என்றால் அது மிகையல்ல. தமிழில் தியா, மாரி - 2 மற்றும் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்துள்ளனர். 

தற்போது நடிகர்கள் பலருக்கும் கிடைக்காத ஒரு பெருமை சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது. 'போர்ப்ஸ்' இந்தியா இதழ் வெளியிட்டுள்ள, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் சாய் பல்லவியை தவிர வேற எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தன்னை பெருமைப்படுத்திய போர்ப்ஸ் இந்தியாவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. நடிகர் ராணாவுடன் 'விரத பர்வம்' மற்றும் நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் அவர் தற்போது நடித்து வருகிறார். 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்