முகப்புடோலிவுட்

ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தில் சாய் பல்லவி…?

  | June 03, 2019 16:32 IST
Rrr

துனுக்குகள்

 • ராஜமௌலி இப்படத்தை இயக்கி வருகிறார்
 • ராம்சரண்,ஜுனியர் என்.டி.ஆர், இப்படத்தில் இணைந்துள்ளனர்
 • இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்கியது

பாகுபலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கி வரும் பிரம்மாண்ட படம் ‘ஆர்.ஆர்.ஆர்'.

இந்த படத்தில் ராம் சரண் – ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர்  ஆகியோர் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக் கனி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்கியது.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்தார். சில காரணங்களால் டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் படத்திலிருந்து விலகிய நிலையில் அவரது கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று படக்குழு ஆலோசித்து வருகிறது.

பரனீதி சோப்ரா அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று பேசப்பட்ட நிலையில் தற்போது நடிகை சாய்பல்லவியிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com