முகப்புடோலிவுட்

ஒரு இரவுக்கு ஒரு கோடி அதிர்ச்சி அடைந்த நடிகை. சமூகவலைதளங்களில் தொடரும் பாலியல் வன்முறை

  | February 02, 2019 16:28 IST
Sakshi Chaudhary

துனுக்குகள்

  • இவர் தமிழில் ஆயிரத்தில் இருவர் என்கிற படத்தில் நடித்தார்
  • தற்போது மேக்னெட் என்கிற படத்தில் நடத்து வருகிறார்
  • இவர் தெலுங்கு பட உலகில் பிரபலமானவர்
நடிகைகள்  சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவது இயல்புதான். ஆனால் அதில் சிலர் அவர்களின் புகைப்படத்திற்கு ஆபாச கருத்துக்கள் பதிவிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிலர் மோசமான வார்த்தைகளை பதிவிடுகிறார். இன்னும் சிலர் படுக்கைக்கு அழைக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை சாக்‌ஷி சவுத்ரிக்கும் இதுபோல் ஆபாசமாக சிலர் பதிவிட்டுள்ளனர். தெலுங்கில் நா பெல்லம் ஜேம்ஸ்பாண்ட், செல்பி ராஜா, உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மேக்னட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சாக்‌ஷி சவுத்ரி வலைத்தளத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு மோசமான வார்த்தைகளுடன் பாலியல் அழைப்புகள் வருகின்றன. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருவதாக ஆபாச அழைப்பு விடுத்து முட்டாள்கள் போல் கருத்து தெரிவிக்கின்றனர். நான் விற்பனைக்கு உரியவள் அல்ல” என்று கூறியுள்ளார் என்று செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
 
இதே போன்று சமீபத்தில் மலையாள நடிகை காயத்ரி அருண் என்பவரை ரூ.2 லட்சம் தருவதாக ஒருவர் கூறியிருந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி அருண், “உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறி பதிலடி கொடுத்தார். வாலிபரின் பதிவை ‘ஸ்கிரீன்ஷாட்' எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டார். அது வைரலானது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்