முகப்புடோலிவுட்

புது ஜோடி நித்தின்-ஷாலினியை வாழ்த்திய சமந்தா அக்கினேனி.!!

  | July 23, 2020 19:20 IST
Nithiin Shalini

நடிகர் மற்றும் அரசியல்வாதியான பவன் கல்யாண், வருண் தேஜ் மற்றும் திரிவிக்ரம் சீனிவாஸ் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இளம் டோலிவுட் ஹீரோ நித்தின் நேற்று காலை அவரது 8 ஆண்டு கால காதலி ஷாலினியுடன் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதமே திட்டமிடப்பட்ட இந்த திருமணம் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பூட்டுதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை அன்று நித்தினும் அவரது காதலி ஷாலினியும் வரும் ஜூலை 26-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை முதல், இந்த புது ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் பல இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அதோடு மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் நித்தினின் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் அள்ளி தெளித்துவருகின்றனர்.

சாய் தரம் தேஜ், லட்சுமி மஞ்சு, ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நித்தினை வாழ்த்தியுள்ள நிலையில், அவரது ‘அ ஆ' இணை நடிகர் சமந்தா அக்கினேனியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “இது மிக மிக அழகாக இருக்கிறது.. அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள் நித்தின்.. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்.. பாப்பா உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அந்த மகிழ்ச்சியான புன்னகையைப் பாருங்கள்” என்று தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பூட்டுதல் வழிகாட்டுதல்கள் காரணமாக, திருமண விழா நெருங்கிய உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் மட்டுமே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. சமீபத்தில், நிதின் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை சந்தித்து தனது திருமண அழைப்பை வழங்கியுள்ளார். நடிகர் மற்றும் அரசியல்வாதியான பவன் கல்யாண், வருண் தேஜ் மற்றும் திரிவிக்ரம் சீனிவாஸ் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com