முகப்புடோலிவுட்

வைரல் ஹிட் ‘96’ ரீமேக் ‘ஜானு’ ட்ரைலர் வெளியானது..!

  | January 29, 2020 17:08 IST
96 Movie

சமந்தா - ஷர்வானந்த் இணைந்து நடிக்கும் ‘ஜானு’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சமந்தா - ஷர்வானந்த் இணைந்து நடிக்கும் ‘ஜானு' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இனைந்து நடித்து கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘96'.ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. குறிப்பாக 90's கிட்ஸ்க்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது.

அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ‘எங்கேயும் எப்போதும்' படப் புகழ் ஷர்வானந்த் நடிக்கிறார். அதேபோல், த்ரிஷாவின் ‘ஜானு' கதாப்பாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.
இப்படத்துக்கு தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தா தெலுங்கு ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார். தமிழில் படம் மட்டுமல்லாது, இசையும் வேர லெவல் ஹிட்டானது ஆனது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
இப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்