முகப்புடோலிவுட்

காதல் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள் அரைகூவல் விடுத்த சமந்தா

  | March 13, 2019 18:02 IST
Samatha Majili

துனுக்குகள்

 • திருமணத்திறகு பிறகு நாக சைதன்யா, சமந்தா நடிக்கும் முதல் படம் இது
 • இப்படத்தை சிவ நிர்வனா இயக்குகிறார்
 • திவ்யான்ஷா கெளஷிக், தனிக்கெல்லா இப்படத்தில் நடிக்கிறார்கள்
காதல் உறவுகளுக்குள் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் நீங்கள் கேட்க நினைத்தால் #askchaysam என்கிற ஹேஸ் டேக்கை பதிவு செய்து தனது  கணவரான சைதன்யாவிடமும் தன்னிடமும் ட்விட்டரில் கேட்கலாம் என்று நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
திருமணத்திற்கு பின் நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள தெலுங்கு படம் மஜிலி. இதில் திவ்யான்ஷா கெளஷிக் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க தனிக்கெல்லா பரணி, ராவ் ரமேஷ், சுப்பராஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
 
கேட்கப்படும் கேள்விகளுக்கு ‘மஜிலி' படத்தின் புரோமோஷன் அன்று பதில் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
நின்னுக்கோரி என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சிவ நிர்வனா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். கோபிசுந்தர் இசையில், உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
 
திருமணத்துக்குப் பிறகு நாக சைதன்யாவும், சமந்தாவும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால், மஜிலி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com