முகப்புடோலிவுட்

ட்விட்டரில் அறிமுகமான சிரஞ்சீவி; வரவேற்ற தென்னிந்திய சூப்பர் ஸ்டார்ஸ்..!

  | March 27, 2020 12:06 IST
Chiranjeevi

ஒரு நிமிடத்துக்கு 400  முதல் 500 பின்தொடர்புகளைப் பெற்றுவரும் நடிகர் சிரஞ்சீவிக்கு தற்போது 159.00 K-வை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

டோலிவுட் ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி 21 நாள் ஊரடங்கின் முதல் நாள் மற்றும் உகாதி தினமான நேற்று முதல் முறையாக ட்விட்டரில் தனது கணக்கை துவங்கினார். 64  வயதாகும் இவர், ட்விட்டரில் அறிமுகமானதும் முதல் ட்வீட்டாக “இந்த 21 நாள் ஊரடங்கு என்பது நம் ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்வுக்காக இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு தவிர்க்கமுடியாத நடவடிக்கை. இது காலத்தின் தேவை. நம் அன்பான பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி,முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் ஒய்.எஸ் ஜகன் ஆகியோருடன், நம்மையும், நம் குடும்பங்கள் மற்றும் நம் நாட்டையும் பாதுகாக்க உடன் நிற்போம், #StayHomeStaySafe'' என்று பதிவிட்டிருந்தார்.

அதையடுத்து, நேற்று வெளியான RRR படத்தின் மோஷன் போஸ்டரையும் அவர் ட்வீட் செய்திருந்தார். அதையடுத்து அவரது ரசிகர்களும், பல திரைப் பிரபலங்களும் அவரை ட்விட்டரில் வரவேற்றுள்ளனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், ராதிகா, ராஜமௌளி, நாகர்ஜுனா, சுஹாசினி மணிரத்னம், மகேஷ் பாபு, நித்தின், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், காஜல் அகர்வால், தமன்னா என வரிசையாக பல முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவியை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒரு நிமிடத்துக்கு 400  முதல் 500 பின்தொடர்புகளைப் பெற்றுவரும் நடிகர் சிரஞ்சீவிக்கு தற்போது 159.00 K-வை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அவரது ட்விட்டர் கணக்கில் ஏற்கனவே நீல நிற டிக் கிடைத்துள்ளது, மேலும் கைதி எண் 150 பட தோற்றத்தின் புகைப்படம் உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்