முகப்புடோலிவுட்

அதிர்ச்சியலைகளை உருவாக்கப் போகும் ஸ்ரீரெட்டி டைரி

  | February 11, 2019 12:28 IST
Sri Reddy

துனுக்குகள்

  • ஸ்ரீரெட்டி தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களைப் பற்றி குற்றம்சாட்டினார்.
  • பாலியல் சம்பவங்களை இணைத்து ஸ்ரீரெட்டியின் டைரி என்ற திரைப்படம் வரவுள்ளது
  • ஸ்ரீரெட்டி படத்தினை டாக்டர் அலாவுதீன் இயக்கவுள்ளார்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களைப் பற்றி குற்றம் சாட்டி வந்தார். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலங்களை பற்றி  ஸ்ரீரெட்டி சொல்லி வந்தார்.  இதை ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்றே பலரும் அதைக் குறித்து இணையத்தில் பகிர்ந்து வந்தனர். பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டுகள்  தற்போது படமாக வெளியாகவுள்ளது. 

ஸ்ரீரெட்டியின் வாழ்வில் நடந்த பாலியல் சம்பவங்களை இணைத்து ஸ்ரீரெட்டியின் டைரி என்ற பெயரில் திரைப்படம் வரவுள்ளது. இதில் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர்த்து வேறு பல பிரபலங்களை குறித்தும்  தெரிவித்துள்ளாராம் ஸ்ரீரெட்டி.   
ஸ்ரீரெட்டி படத்தினை டாக்டர் அலாவுதீன் இயக்கவுள்ளார். விரைவில் வெளியாகப் போகும் இந்த ஸ்ரீரெட்டி படம் அதிர்ச்சியலைகளை உருவாக்கும். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்