முகப்புடோலிவுட்

சூப்பர் ஸ்டார்களை உள்ளாடையை வைத்து கொச்சைப்படுத்திய ஸ்ரீ ரெட்டி..!

  | November 09, 2019 12:55 IST
Sri Reddy

துனுக்குகள்

  • முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தவர் ஸ்ரீ ரெட்டி.
  • சூப்பர் ஸ்டார் பெயர்களை குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
  • நியாம் கேட்டு நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சைக்கு உள்ளானவர்.
தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை ஸ்ரீ ரெட்டி தனது உள்ளாடையை வைத்து அசிங்கப்படுத்தியதால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் சர்ச்சை நாயகியாக ஸ்ரீ ரெட்டி உள்ளார். அவர் பல முன்னணித் திரைப்பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்துவந்தார். சினிமாவில் தனக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறி தன்னை உடல் ரீதியாக ஆசைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு ஏமற்றியதாகக் கூறி, தனக்கு நியாயம் அளிக்குமாறு தெலுங்கு திரைப்பட அலுவலகம் முன் நிர்வாணமாக நின்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். தொடர்ந்து, ஸ்ரீ காந்த், லாரன்ஸ் என பல முன்னணி நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்ட வார்த்தைகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சிவி மற்றும் நாகர்ஜுனாவை தனது உள்ளாடையை முகர்ந்து பார்க்க பரிசளிக்க நினைப்பதாக கூறியுள்ளார். அவரது அந்த போஸ்ட்டில் “என்னை பிடிக்காதவர்கள் எல்லாம் என உள்ளாடையை முகர்ந்து பாருங்கள், அடுத்த கணத்திலிருந்து அவர்களுக்கு என்னைப் பிடிக்கும்.. கண்டிப்பாக சிரஞ்சீவிக்கும் நாகர்ஜுனாவுக்கும் அதை பரிசாக கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக ” எனது மதிப்பை அறிந்துகொள்ள அந்த நடிகர்கள் எனது உள்ளாடையை துவைக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். அவரின் இது போன்ற போஸ்டால் ரசிகர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்