முகப்புடோலிவுட்

அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரமுலோ’ படைத்த புதிய சாதனை.!!

  | August 27, 2020 21:49 IST
Allu Arjun

புஷ்பா திரைப்படம் தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என அல்லு அர்ஜுன் நம்புகிறார்.

அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரமுலோ' இந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய தெலுங்கு படங்களில் ஒன்றாகும். பெண் முன்னணி கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பான வசூலை ஈட்டியது. ஜனவரி மாதம் வெளியான இந்த படம், சில மாதங்களுக்குப் பிறகு இப்போது சிறிய திரையில் அதன் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஆம், அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரமுலோ' திரைப்படம் மிக உயர்ந்த அளவாக 29.4 டிஆர்பி மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது. இது ஒரு தெலுங்கு படத்திற்கு மிகச் சிறந்ததாகும். பாகுபலி திரைப்படம் 22.7 டிஆர்பி மதிப்பீட்டில் உள்ளது, அதேபோல இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியான மகேஷ் பாபு நடித்த ‘சரிலேரு நீக்கெவரு' 23.4 டிஆர்பி பதிவு செய்துள்ளது.

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ மற்றும் மகேஷ் பாபுவின் சரிலேரு நீகெவரு ஆகியவை இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளாக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் வெளியான சில மாதங்களிலேயே புதிய சாதனைகளை அமைத்து வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுனுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

இதற்கிடையில், சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பெண் முன்னணி கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் வெளியாகவுள்ள இப்படத்தில் லாரி டிரைவர் வேடத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

புஷ்பா திரைப்படம் தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என அல்லு அர்ஜுன் நம்புகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com