முகப்புடோலிவுட்

‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக்கில் தமன்னா.! விரைவில் படப்பிடிப்பு...

  | September 19, 2020 17:41 IST
Tamannaah

இப்படத்தில் நித்தின் கதாநாயகனாக நடிக்கிறார், முக்கிய வேடத்தின் நபா நடேஷ் நடிக்கிகிறார்.

டோலிவுட்: நித்தின் நடிப்பில் மெர்லபகா காந்தி இயக்கத்தில் ஸ்ரேஷ்த் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்திற்காக தமன்னா, நபா நடேஷ் ஆகியோர் முக்கிய பெண் கதாப்பாத்திரங்களில் நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இப்படம் இந்தி சூப்பர் ஹிட் திரைப்படமான ‘அந்தாதுன்' படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் வரும் நவம்பர் முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது. அசல் திரைப்படத்தில் தபு மற்றும் ராதிகா ஆப்தேவின் பாத்திரங்களை, தெலுங்கில் தமன்னா பாட்டியா மற்றும் நபா நடேஷ் ஏற்று நடிக்கவுள்ளனர்.

இப்படம் ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றதோடு, இப்படத்திற்காக நடிகை தபு விமர்சன ரீதியான பாராட்டுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கதாப்பாத்திரத்தில் இப்போது தமன்னா தனது திறனை வெளிப்படுத்தவுள்ளார்.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நல்ல முக்கியத்துவம் உண்டு, அதேபோல், முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நபா நடேஷ் நடிக்கிறார்.

என். சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி ஆகியோர் இப்படத்தை ஸ்ரேத் மூவிஸின் பேனரின் கீழ் தயாரிப்பு எண் 6-ஆக தயாரிப்பார்கள். தாகூர் மது இப்படத்தை வழங்குவார்.

மஹதி ஸ்வரா சாகர் இப்படத்துக்கு இசையமைக்க, ஹரி கே. வேதாந்த் கேமராவை இயக்குகிறார். பிற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com