முகப்புடோலிவுட்

"கார்த்திகேயாவுடன் இணையும் தான்யா ரவிச்சந்திரன்" - விரைவில் வெளியாகும் சூப்பர் அப்டேட்..!

  | September 21, 2020 08:24 IST
Karthikeya Gummakonda

துனுக்குகள்

  • கடந்த 2016ம் ஆண்டு வெளியான 'பலே வெள்ளையத்தேவா' என்ற படத்தின்
  • இந்நிலையில் RX 100, 90ML போன்ற பல தெலுங்கு படங்களில் கதையின் நாயகனாக
  • தான்யா மற்றும் கார்த்திகேயா இணையும் இந்த படத்தை ஸ்ரீ சரிப்பள்ளி என்ற
1964ம் ஆண்டு வெளியான 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பெரிய அளவில் பெயர் பெற்ற நடிகர் தான் ரவிச்சந்திரன். அத பிறகு அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா, போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். இறுதியாக கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஆடு புலி என்ற படத்தில் இவர் நடித்தார். உடல்நலக்குறைவால் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் இயற்கை எய்தினார். தற்போது இவருடைய பேத்தி தமிழ் திரையுலகில் நடிகையாக களமிறங்கியுள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு வெளியான 'பலே வெள்ளையத்தேவா' என்ற படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார். அவர் தான் தான்யா ரவிச்சந்திரன். அருள்நிதியுடன் பிருந்தாவனம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கருப்பன் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிஷோர் என்ற புதுமுக இயக்குநரின் மாயோன் என்ற தமிழ் படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் RX 100, 90ML போன்ற பல தெலுங்கு படங்களில் கதையின் நாயகனாக வந்து அசத்திய பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா அவர்களின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தான்யா. கார்த்திகேயா அவர்கள் தல அஜித்தின் வலிமை படத்தின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தான்யா மற்றும் கார்த்திகேயா இணையும் இந்த படத்தை ஸ்ரீ சரிப்பள்ளி என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com