முகப்புடோலிவுட்

கொரோனாவால் திருமணத்தை தள்ளிப்போட்ட பிரபல தெலுங்கு நடிகர்..!

  | March 27, 2020 13:57 IST
Nithin

காமெடி நடிகர் யோகி பாபு, சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாள ஹீரோக்களுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அதன் அடிப்படையில், மோகன் லால், விஜய் தேவரகொண்டா, ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், ராம் சரன், மகேஷ் பாபு, பிரபாஸ்,அல்லு அர்ஜுன் ஆகியோரின் வரிசையில் தெலுங்கு நடிகர் நித்தினுக்கும் இங்கு ரசிகர்கள் உண்டு.

தெலுங்கு ஹீரோ நித்தின் பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் தனது நீண்டகால காதலி ஷாலினியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தம்பதியினரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாவும் நடந்தது. மேலும், இவர்களின் திருமணம் வரும் ஏப்ரல் 16-ஆம் தேது அன்று நடைபெறவிருந்தது.

இருப்பினும், கொரோனா வைரஸ் வெடிப்பு தீவிரமாக மாறியதிலிருந்து, நித்தின் குடும்பத்தினர் துபாயில் உள்ள  பாலாஸ்ஸோ வெர்சேஸில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தது. பின்னர், இருவரின் குடும்பங்கள் ஒரே தேதியில் ஹைதராபாத்தில் திருமணம் நடத்த முடிவு செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது, நித்தின் மற்றும் ஷாலினியின் ஏப்ரல் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்த பின்னரே தம்பதியினர் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், காமெடி நடிகர் யோகி பாபு, சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வைத்துள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com