முகப்புடோலிவுட்

"மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி" - வெளியானது 'பவர் ஸ்டார் பவன் கல்யாண் 28' அப்டேட்..!

  | September 03, 2020 11:43 IST
Pspk 28

துனுக்குகள்

 • 1996ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான "Akkada Ammayi Ikkada Abbayi"
 • நடிப்பு மட்டும் இல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஸ்டண்ட்
 • தனது 28வது படத்தின் அப்டேட் ஒன்றை தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு
1996ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான "Akkada Ammayi Ikkada Abbayi" என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் பவன் கல்யாண். தெலுங்கு ரசிகர்கள் இவரை அன்பாக பவர் ஸ்டார் என்று அழைப்பதுண்டு. அனல்பறக்கும் நடிப்பை வெளிப்படுத்தும் இவருக்கு தெலுங்கு திரையுலகில் ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருடைய ஒவ்வொரு பட வெளியீட்டையும் திருவிழாவை போல கொண்டாடுவது இவருடைய ரசிகர்களின் வழக்கம் என்றால் அது மிகையல்ல. 2003ம் ஆண்டு வெளியான ஜானி என்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும் களமிறங்கினர். 

நடிப்பு மட்டும் இல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஸ்டண்ட் இயக்குநர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பன்முக திறமைக்கொண்டவர் தான் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவர் அரசியல்வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது. தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வக்கீல் சாப் என்று அந்த படம் பெயரிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இவருடைய 27வது படத்தின் அப்டேட் வந்த நிலையில் மீண்டும் ஒரு வெற்றிக்கூட்டணியுடன் இணைந்து தனது 28வது படத்தின் அப்டேட் ஒன்றை தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு கொடுத்து அசத்தியுள்ளார் பவர் ஸ்டார். 2012ம் ஆண்டு கப்பார் சிங் என்ற படத்தை பவனை வைத்து இயக்கிய பிரபல இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். கப்பார் சிங் படத்திற்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com