முகப்புடோலிவுட்

பூஜா ஹெக்டே - அகில் நடிப்பில் Most Eligible Bachelor; வைரலாகும் புதிய போஸ்டர்..

  | July 29, 2020 17:47 IST
Eligible Bachelor

அகில் அக்கினேனி டோலிவுட் ஸ்டார் நாகர்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

டோலிவுட்: அகில் அக்கினேனி மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இணைந்து வரவிருக்கும் படமான ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்' என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். படம் ஆரம்பத்தில் இருந்தே இந்த டோலிவுட் நகரத்தின் பேச்சாக இருந்து வருகிறது. மேலும் இப்படத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையில், இப்போது பூஜா மற்றும் அகில் ஆகியோரின் சிறந்த ஸ்டைலான மற்றும் காதல் அவதாரத்தில் இடம்பெறும் புகைப்படத்தின் புதிய போஸ்டரை  தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் பூஜா ஹெக்டே அகிலை கவர்ந்திழுக்க முயற்சிக்கையில் அவர் தனது மடிக்கணினியில் பிஸியாக இருக்கிறார். இந்த போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த அகில், “எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் ஒரு பார்வை இங்கே” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் திரைப்பட பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில், ஜிஏ 2 பிக்சர்ஸ் பேனரின் கீழ் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்' தயாரிக்கப்படுகிறது. படத்தில் பிரதீப் எம் சர்மா ஒளிப்பதிவைக் கையாள, கோபி சுந்தர் இசையமைப்பார். இது அகிலின் 4-வது படம் ஆகும்.

2014-ஆம் ஆண்டில் ‘மனம்' திரைப்படத்தில் ஒரு கேமியோ மூலம் நடிப்பில் அறிமுகமான அகில், முன்னணி நடிகராக அவரது முதல் படம் ‘அகில்' என்று பெயரிடப்பட்டது. 2015ல் வெளியிடப்பட்ட இப்படம் போதிய வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து ‘ஹலோ' மற்றும் ‘மிஸ்டர் மஜ்னு' ஆகிய படங்களில் நடித்தார்.

அகில் அக்கினேனி டோலிவுட் ஸ்டார் நாகர்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com