முகப்புடோலிவுட்

ராஜமௌலி பட வில்லனாகும் ‘Thor’ நடிகர்..! கதாநாயகி யார் தெரியுமா..!!

  | November 21, 2019 14:10 IST
Jr Ntr

துனுக்குகள்

  • ஆர்.ஆர்.ஆர் படத்தை ராஜமௌலி இயக்குகிறார்.
  • இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடித்துள்ளனர்.
  • இப்படத்தில் வில்லனாக ரே ஸ்டீவன்சன் நடிக்கிறார்.
ராஜமௌலி இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மற்றொரு கதாநாயகி மற்றும் வில்லன் யார் என படக்குழு அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலேய அரசுக்கும் ஹைதராபாத் நிஜாமுக்கும் எதிராக போராடிய இந்திய விடுதல் போராட்டத் தியாகிகளான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் கதையை மையாமாக வைத்து ராஜமௌலி இயக்கிவரும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் அந்த இரண்டு முக்கிய காதாப்பாத்திரத்தில் ஜூனியன் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் தேஜா நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஒரு கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் சில முக்கிய வேடங்களில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டி.வி.வி. தனய்யா தயாரிக்கும் இப்படத்துக்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். கே.கே. செந்தில் குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்கின்றனர். ரூ. 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் 2020-ஆண்டில் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியன் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவிருந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் திடீரென இப்படத்திலிருந்து விலகிய நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள இரண்டாவது கதாநாயகி யார் என்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜெனிஃபர் எனும் கதாப்பாத்திரத்தில் ஒலிவியா மோரிஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இத்திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரமான ஸ்காட் வேடத்தில் ‘தார் ராக்னோரக்' படத்தில் நடித்த ஐரிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் நடிக்கிறார். லேடி ஸ்காட்டாக ஐரிஷ் நடிகை ஆலிசன் டூடி நடிக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்