முகப்புடோலிவுட்

அகில் அக்கினேனி - சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு..!

  | September 09, 2020 11:35 IST
Akhil Akkineni

இந்த திட்டத்தை ராமபிரம்மம் சுங்கரா ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் & சுரேந்தர் ரெட்டியின் சரண்டர் 2 சினிமா பேனரின் கீழ் தயாரிக்கிறார்.

நாகர்ஜுனா அக்கினேனியில் இளைய மகன், இளம் ஹீரோ அகில் அக்கினேனி, இயக்குனர் சுரேந்தர் ரெட்டியுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க தயாராக உள்ளார்.

‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடித்த ‘சை ரா நரசிம்ம ரெட்டி' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு புகழ்பெற்ற சுரேந்தர் ரெட்டி, வக்காந்தம் வம்சியின் சக்திவாய்ந்த கதையில் அகிலை இயக்கப் போகிறார். அகில் அக்கினேனி மற்றும் சுரேந்தர் ரெட்டி ஆகியோரின் இந்த புதிய கலக்கலான கூட்டணி திட்டத்தை, ராமபிரம்மம் சுங்கரா ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர் மற்றும் சுரேந்தர் ரெட்டியின் சரண்டர் 2 சினிமா பேனரின் கீழ் தயாரிக்கிறார்.

c09jj6ro

சுரேந்தர் ரெட்டி தனது ஹீரோக்களை அவர்களின் ஸ்டைலான சிறந்த முறையில் வழங்குவதில் பிரபலமானவர் என்பதால், அவர் தனது 5-வது படத்தில் அகில் அக்கினேனியின் புதிய தோற்றத்தில் காட்டத் தயாராகி வருகிறார். மகேஷ் பாபு நடிப்பில் கடசியாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சாரிலேரு நீக்கேவரு' படத்துடன் தொடங்கிய ஏ.கே. என்டர்டெயின்மென்ட்ஸ், ‘அகில் 5' உடன் அதன் வெற்றியை மிகப் பெரிய அளவில் தொடரப் போகிறது. பிற நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com