முகப்புடோலிவுட்

ரஜினியின் ‘சிவாஜி தி பாஸ்’ கெட்டப்பில் மெகா ஸ்டாரின் புதிய லுக்.!

  | September 10, 2020 23:11 IST
Chiranjeevi

சிரஞ்சீவி ‘ஆச்சார்யா' என்ற தலைப்பில் வரவிருக்கும் படத்தில் காணப்படுவார். இந்த படத்தை கோரட்டலா சிவா இயக்குகிறார்.

சங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  அந்த படத்தில் கிளைமேக்ஸில் ரஜினி ‘எம்.ஜி.ஆர்' என்ற பெயரில் மொட்டை அடித்துக்கொண்டு ஒரு ஆச்சரியமான கெட்டப்பில் கலக்கியிருப்பார்.

இப்போது, ‘ஆச்சார்யா' பட நாயகனான, டோலிவுட்டின் ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவியும் அதேபோன்ற ஒரு லுக்கில் காணப்படுகிறார். சிரஞ்சீவி இன்று மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய ‘மொட்டை பாஸ்' லுக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை வெளியிட்ட அவர் “#UrbanMonk என்னால் துறவியைப் போல சிந்திக்க முடியுமா?” என தலைப்பிட்டிருந்தார். மொட்டைத் தலையுடன் ஸ்டைலான கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் அவரது இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

#UrbanMonk Can I think like a monk?

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela) on

பணி முன்னணியில், சிரஞ்சீவி ‘ஆச்சார்யா' என்ற தலைப்பில் வரவிருக்கும் படத்தில் காணப்படுவார். இந்த படத்தை கோரட்டலா சிவா இயக்குகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com