முகப்புடோலிவுட்

நீதிமன்றத்தில் வாதாடும் பவன் கல்யாண்.! வைரலாகும் ‘வக்கீல் சாப்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

  | June 30, 2020 20:36 IST
Vakeel Saab

இப்படம் தெலுங்கு மக்களுக்கு ஏற்றார்போல், சிறிது மசாலவுடன் சேர்த்து சமூக கருத்தைத் தெரிவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் ஹிட் ‘பிங்க்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘வக்கீல் சாப்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அரசியலில் மிகுந்த கவனம் செலுத்திவரும் பவன் கல்யான் தற்போது இப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திரைப்படம் பவன் கல்யாணின் 26-வது திரைப்படமாகும்.

ஹிந்தியில் அமிதாப் பச்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டான இப்படத்தைத் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை' என ரீமேக் செய்யப்பட்டது. அதில் அல்டிமேட் ஸ்டார் ‘அஜித் குமார்' மிரட்டலாக நடித்திருந்தார். தமிழிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டான் இப்படம் தற்போது தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ள பவன் கல்யாண் நடிக்கிறார்.

இப்படம் தெலுங்கு மக்களுக்கு ஏற்றார்போல், சிறிது மசாலவுடன் சேர்த்து சமூக கருத்தைத் தெரிவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை வேணு ஶ்ரீராம் இயக்குகிறார். இப்படத்துக்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். பவன் கல்யாண் கால் மேல் கால் போட்டு, ரிலாக்ஸாக சாய்ந்துகொண்டு புத்தகம் படிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்போது, பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. அது பவன் கல்யாண் நீதிமன்றத்தில் வாதாடும் காட்சியாகும்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com