முகப்புடோலிவுட்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படப்பிடிப்பில் பெரிய மாற்றம்.?

  | June 29, 2020 21:12 IST
Pushpa

இப்படத்தில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வென்னேலா கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா' பட தயாரிப்பாளர்கள் ஜூலை முதல் வாரம் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக இரு வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஆனால் கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாக பல மாதங்கள் நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

இப்படத்தின் இயக்குநர் சுகுமார், முதலில் அனைத்து பாடல்களையும் முடிக்க விரும்பியதால், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும்  ஹைதராபாத்தின் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஒரு டூயட் பாடலை மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுவந்தன.

புஷ்பாவின் முதல் அட்டவணை கேரளாவில் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டது. மீதமுள்ள படப்பிடிப்பு அதே இடத்தில் படமாக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, இயக்குநர் சுகுமார், தெலுங்கானாவின் நல்கொண்டா அடர்ந்த காட்டுக்கு இடையில் இடங்களை சோதனையிட்டு, படப்பிடிப்பை அங்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

t5jdqki8

ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் இந்த திரைப்படம் மணல் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வென்னேலா கிஷோர் மற்றும் அனிஷ் குருவில்லா ஆகியோரும் நடிக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com