முகப்புடோலிவுட்

புகழ்பெற்ற மூத்த தெலுங்கு நடிகர் ரவி கொண்டலா ராவ் காலமானார்.!

  | July 29, 2020 10:16 IST
Raavi Kondala Rao

2015 ஆம் ஆண்டில் வெளியான ராம் கோபால் வர்மாவின் ‘365 டேஸ்’ படத்தில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.

தெலுங்கு எழுத்தாளரும், இயக்குநரும்-தயாரிப்பாளருமான ரவி கொண்டலா ராவ் நேற்று தனது 88 வது வயதில் காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ரவி இருதய நோயால் இறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அவர் தனது பதிவில் “மூத்த நடிகர், எழுத்தாளர், பல்துறை அறிவுஜீவி மற்றும் கலைஞரான ஸ்ரீ ரவி கொண்டலராவ் மரணம் துயரமானது. தெலுங்கனைத் தூண்டும் பாத்திரங்களில், அவரது நடிப்பு வேடிக்கையானது, நகைச்சுவையைச் சேர்க்ககூடியது. அவருடைய ஆத்மாவுக்கு அமைதி அளிக்கும்படி கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” என்று எழுதியிருந்தார்.


1958 ஆம் ஆண்டில் சோபா திரைப்படத்துடன் ஒரு நடிகராக தெலுங்கு திரைப்படத் துறையில் இறங்குவதற்கு முன்பு ரவி ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், அவர் ஒரு இயக்குனர், மிமிக்ரி கலைஞர் மற்றும் பலவற்றிலும் தனது திறமையை நிரூபித்திருந்தார். ராமுடு பீமுடு, தேனே மனசுலு, தசரா புல்லோடு, சாந்தபாய், பெல்லி புஸ்தகம், பைரவா ட்வீபம் போன்ற படங்களிலும் ராவி துணை வேடங்களில் நடித்தார்.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், ரவி கோண்டலா ராவ் 600 க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் வெளியான ராம் கோபால் வர்மாவின் ‘365 டேஸ்' படத்தில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.

தன் மனைவியும் நடிகையுமான ராதா குமாரி 2012-ஆம் ஆண்டு இறந்த பிறகு, தனது மகன் வெங்கட சஷிகுமாருடன் வாழ்ந்துவந்த நிலையில், நேற்று காலமானார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com