முகப்புடோலிவுட்

டோலிவுட் நடிகர் நித்தின் - ஷாலினி நிச்சயதார்த்தம் முடிந்தது.!

  | July 22, 2020 19:16 IST
Nithiin

தம்பதியினர் மகிழ்ச்சியாக மோதிரங்களை மாறிக்கொள்ளும் இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதமே தனது காதலியுடன் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளம் டோலிவுட் ஹீரோ நித்தின் இன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பூட்டுதல் காரணமாக முன்னதாக திட்டமிடப்பட்ட திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

நித்தினும் அவரது காதலி ஷாலினியும் வரும் ஜூலை 26-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, திருமண விழா நெருங்கிய உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று, நித்தியின் மற்றும் ஷாலினி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர், இந்த நிகழ்விலிருந்து ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நித்தின் பகிர்ந்து கொண்டார். அதற்கு “அண்ட் நிச்சயதார்த்தம் முடிந்தது” என்று தலைப்பிட்டுள்ளார். தம்பதியினர் மகிழ்ச்சியாக மோதிரங்களை மாறிக்கொள்ளும் இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகிவருகிறது. இந்த ஜோடி எட்டு ஆண்டுகளாக உறவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com