முகப்புடோலிவுட்

விஜய் தயாரிப்பில் கதாநாயகியாகும் பிரபல சீரியல் நடிகை…?

  | April 15, 2019 17:21 IST
Vani Bhojan

துனுக்குகள்

 • இந்த படத்தை விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார்
 • இப்படத்தை சமீர் இயக்குகிறார்
 • இப்படத்தில் தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கிறார்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் புதிய படத்தில் சீரியல் நடிகை வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார்.

தனியார் தொலைக்காட்ச்சியில்  ஒளிபரப்பான ‘ஆஹா' சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். இந்த நாடகத்தைத் தொடர்ந்து பல்வேறு தனியார் தொலைகாட்சிகளில் சீரியலில் நடிதுது பிரபலமானார்.

சமீபத்தில் வைபவ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தமானார். இந்த படத்தை லோகேஷ் என்பவர் இயக்கி வருகிறார்.
தற்போது விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் வாணி போஜன். விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புடு படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து வாணி போஜன் கூறுகையில், “தனக்கு தெலுங்கு மொழி சரளமாக தெரியாது என்றாலும் படக்குழுவினர் பெரும்பாலானோர் தமிழில் பேசுவதால் தனக்கு சிரமம் இல்லை என்றும், வசனத்தை மனப்பாடம் செய்து ரிகர்சல் செய்து கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com