முகப்புடோலிவுட்

தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கும் விஜய் பட வில்லி

  | January 16, 2019 11:56 IST
Varalaxmi Sarathkumar

துனுக்குகள்

  • போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்
  • இவர் நடிகர் சரத்குமாரின் மகள்
  • தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘போடா போடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
தொடர்ந்து விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மத கஜ ராஜா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ‘சர்கார்' மற்றும் ‘சண்டக்கோழி 2' படங்களில் வில்லியாக நடித்ததன் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
 

இந்நிலையில், முதன்முதலாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சந்தீப் கிஷண் மற்றும் ஹன்சிகா ஆகியோரோடு இணைந்து வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்.' என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாகேஸ்வர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்துக்கு, சாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். சேகர் சந்திரா இசையமைக்கிறார்.

தற்போது வரலட்சுமி கைவசம்  ‘வெல்வெட் நகரம்', ‘கன்னி ராசி', ‘நீயா 2', ‘காட்டேரி', ‘அம்மாயி' ஆகிய படங்கள் உள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்