முகப்புடோலிவுட்

தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்…!

  | September 25, 2019 15:51 IST
Venu Madhav

துனுக்குகள்

 • 1996ம் ஆண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் இவர்
 • தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் வேணு மாதவன்
 • வேணு மாதவனின் இறப்புக்கு திரையுலகினர் அஞ்சலி
கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நகைச்சுவை நடிகர் வேணு மாதவன்.
 
கடந்த 1996-ல் 'சம்பிரதாயம்' என்ற தெலுங்க படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய வேணு மாதவன். இதுவரை சுமார் 170 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் வெளியான ‘காதல் சுகமானது', ‘என்னவளே' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றார்.
 
கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.30 மணியளவில் உயிரிழந்தார். கடைசியாக 2016-ல், 'டாக்டர் பரமானந்தய்யா' ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும்,  திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வேணு மாதவனுக்கு வயது 39 என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com