முகப்புடோலிவுட்

2022-ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‘அர்ஜுன் ரெட்டி’..? மகிழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா ஃபேன்ஸ்!

  | August 28, 2020 20:38 IST
Dhruv Vikram

இப்படம், தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்ற தலைப்பில் ரீமேக் சேய்யப்பட்டது. அதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி' என்ற பிளாக்பஸ்டர் படம், நீக்கப்பட்ட காட்சிகளுடன் 2022-ஆம் ஆண்டில் மீண்டும் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் மறு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், படம் குறித்த சமீபத்திய செய்தி அறிக்கைகள் என்னவென்றால், 2022-ஆம் ஆண்டில் படத்தின் மறு வெளியீடு குறித்து இயக்குநர் திட்டமிட்டுவருவதாகக் கூறப்படுகின்றன.

சுவாரஸ்யமாக, இப்படம் அதன் 5-வது ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ளது. விஜய் தேவரகொண்டா நடித்த இப்படம் 2022-ஆம் ஆண்டில் மீண்டும் வெளியாகலாம் என்ற செய்தி ரசிகர்களையும் திரைப்பட பார்வையாளர்களையும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், நீக்கப்பட்ட காட்சிகளுடன் படம் மீண்டும் வெளியாகும் என்று கூறப்படுவதால ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய ஹிட்டான இந்தப் படம், தற்போது இளம் முன்னணி நட்சத்திரமாக டோலிவுட்டில் வலம் வரும் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப்பெரிய வெற்றிகளையும் புகழையும் அளித்தது. இப்படத்தில் நடிகை ஷாலினி ரெட்டி கதாநாயகியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படம், தமிழில் ‘ஆதித்யா வர்மா' என்ற தலைப்பில் ரீமேக் சேய்யப்பட்டது. அதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இப்படம் ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் ‘கபீர் சிங்' என ரீமேக் செய்யப்பட்டது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com