முகப்புடோலிவுட்

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு - 'காதலுக்கு NO சொன்ன 'World Famous Lover'

  | February 11, 2020 14:56 IST
Vijay Devarakonda

இந்த 2020ம் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.

துனுக்குகள்

  • 'காதலுக்கு NO சொன்ன 'World Famous Lover'
  • 'நுவில்லா' என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்
  • சேர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா மற்றும் இசபெல்லா
இதுவரை நேரடியாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்றபோதும், கடந்த 2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பல தமிழ் ரசிகர்களை, குறிப்பாக பெண் ரசிகர்களை ஈர்த்தவர் விஜய் தேவர்கொண்டா. கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'நுவில்லா' என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான இவர், 8 ஆண்டுகளில் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் நுழைந்துவிட்டார்.

இந்த 2020ம் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா மற்றும் இசபெல்லா என்று நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றார். இந்நிலையில் இந்த படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜய் தேவர்கொண்டா, ரசிகர்களுக்கும் இந்த படத்தில் உழைத்த எல்லா கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர், 'எனக்கு தெரிந்து, இது என் கடைசி லவ் ஸ்டோரி என்று குறிப்பிட்டார்' நான்கு கதாநாயகிகள் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க காதலால் நிரம்பியுள்ளதால் இனி காதல் கதைகளில் நடிக்கப்போவதில்லை என்று கூறினார். சினிமா துறையில் நல்ல அந்தஸ்த்தில் உள்ள இந்த நடிகைகளோடு நடித்தது மிகவும் பெருமை அளிக்கிறது என தேவர்கொண்டா குறிப்பிட்டார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்