முகப்புடோலிவுட்

வெளியானது ராம் கோபால் வர்மாவின் ‘கொரோனா வைரஸ்’ ட்ரைலர்.!

  | May 26, 2020 19:03 IST
Ram Gopal Varma

த்ரில்லர் கதைகளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் திகிலான ட்ரைலர் செம வைரலாகிவருகிறது.

சர்ச்சைக்கு பெயர் போன பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவை, புதுமையான படைப்புகளை செய்வதிலிருந்து எவற்றாலும் தடுக்க முடியாது, யேன் கோரோனா வைரஸாலும் முடியாது என அவ்ர் நிரூபித்துள்ளார்.

சமீபத்தில் அவர் ஆங்கில நடிகை மியா மல்கோவாவை வைத்து ‘கிளைமேக்ஸ்' எனும் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் சுவாரஸ்யமான ட்ரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளியானது.

பலரும், இந்த கிளைமேக்ஸ் திரைப்படத்தினை ஆர்வமாக எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று இயக்குநர் ராம் கோபல் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் ‘கொரோனா வைரஸ்' என்ற பெயரில் முழு நீள படத்தினை இயக்கியுள்ளதாகவும், அப்படம் முழுவதும் இந்த லாக்டவுனுக்கு இடையில் எடுக்கப்பட்டதாவும் கூறினார்.

மேலும் இப்படம் உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக இருக்கும் என்ற அவர், இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

அதேபோல், தற்போது இந்த ‘CoronaVirus' திரைப்படத்தின் சுவாரஸ்யமான ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதைகளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் திகிலான ட்ரைலர் செம வைரலாகிவருகிறது. மேலும் பல ரசிகர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களுடன் நல்ல வரவேற்பினைப் பெற்றுவருகிறது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com