முகப்புடோலிவுட்

சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’வில் இணையும் இளம் கியூட் நடிகை.?

  | September 11, 2020 14:55 IST
Chiranjeevi

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் ‘புஷ்பா’ படத்திலும் ராஷ்மிகா நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது பான் இந்திய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி' படத்திற்கு பிறகு, கோரட்டலா சிவா இயக்கத்தில் தனது அடுத்த மெகா திட்டமான 'ஆச்சார்யா' படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில், முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா கையெழுத்திட்டார், ஆனால் சில வாரங்களுக்கு முன்பு படக்குழுவுடனான படைப்பு வேறுபாடுகளை சுட்டிக்காட்டி படத்திலிருந்து வெளியேறினார். அதையடுத்து அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் அந்த வேடத்தில் ஒப்பந்தமானதாக தகவல்கள் வெளிவந்தன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் குறித்த சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், வளர்ந்துவரும் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

5i4etalo

சிரஞ்சீவி நடிப்பில் ரஷ்மிகா மந்தன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று ‘ஆச்சார்யா' குறித்த சமீபத்திய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் ‘புஷ்பா' படத்திலும் ராஷ்மிகா நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தண்ணாவின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் ‘ஆச்சார்யா'வில் அவர் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.

நக்சலிசம் பின்னணியுடன் கூடிய அதிரடி-பொழுதுபோக்கு திரைப்படம் எனக் கூறப்படும் ‘ஆச்சார்யா'வை ராம் சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவி அதில், 30 வயதான கோவிந்த் மற்றும் ஒரு நடுத்தர வயது ஆச்சார்யா என இரண்டு வெவ்வேறு அவதாரங்களில் காணப்படுவார். மணி சர்மா இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com