முகப்பு வீடியோ

புத்தக அறிமுகம் - ஜன்னல் வழியே ஒரு முன்னோட்டம்

தேதி: December 21, 2016 | முகப்பு: 59:47

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷ் அவர்களின் மனைவியும், வெற்றி பட இயக்குனருமான திருமதி. ஐஸ்வர்யா தனுஷின் புத்தக வெளியீடு! ஐஸ்வர்யா தனுஷின் புதிய பரிமாணம்! சூப்பர்ஸ்டாரின் மகள், மிக பிரபலமான நடிகரின் மனைவி, பெரிய இயக்குனர், இரண்டு மகன்களின் தாய் என்று பல்வேறு முகங்களுடன் வளையவரும் ஐஸ்வர்யா தன் மற்றொரு அடையாளமாய், எழுத்தாளராய் உருவெடுக்கிறார்.

ஸ்டாண்டிங் ஆன் தி ஆப்பிள் பாக்ஸ் என்ற அவரது புத்தகத்தினை வெளியிடுபவரோ திருமதி ஸ்வேதா. அமிதாப் பச்சன் அவர்களின் மகள்! பிரபலங்களின் மகளாய் பிறந்ததால் கிடைத்த மாறுபட்ட வாழ்க்கைச் சூழல்கள், அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள், பலன்கள், இன்று வரை தொடரும் சவாலான தருணங்கள், ஒரு தாயாக ஏற்க வேண்டிய பொறுப்புகள் என்று ஒவ்வொன்றாய் தன் பார்வையில் விவரிக்கும் இப்புத்தகத்தை மற்றொரு பிரபலத்தின் மகளே வெளியிடுவது அற்புதம், பொருத்தம்.

பர்காதத்தின் ஆழமான கேள்விகளும் அதற்க்கான பளிச் பதில்களும் உங்களுக்காக..

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com